அந்த வகையில் எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது ஆரம்ப காலத்தில் நான் அதனைப் பற்றி சிந்திக்கவே இல்லை.
திடீரென ஒரு நண்பர் உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா என்று கேட்டார் அதற்கு நான் இல்லை என்று கூறினேன் அப்பொழுதுதான் தெரிந்தது ரேஷன் கார்டு எடுக்க வேண்டும் என்று.
வீட்டிற்கு வந்தேன் ரேஷன் கார்டு பற்றி சிந்திக்கும் பொழுது தான் ஓகே நாமும் ரேஷன் கார்டுக்கு apply செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்ய என்னுடைய ஆதார் கார்டு மற்றும் என்னுடைய மனைவியின் ஆதார் கார்டு மற்றும் எனது மகனின் ஆதார் கார்டு தேவை பட்டது ஆனால் எனது மகனின் வயது 2 ஆகிய உள்ளது அதனால் ஆதார் கார்டு இல்லை.
ஆதார் கார்டு இல்லாமல் பிறந்த சர்டிபிகேட் கொண்டு ரேஷன் கார்டு அப்ளை செய்யலாம் என்று கடைக்காரர் கூறியதால் அப்ளை செய்தேன்.
என்னுடைய நேரம் சரியில்லாத காரணமோ என்ன என்று தெரியவில்லை மூன்று நிலைகள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது நிலை நிராகரிக்கப்பட்டது.
காரணம் என்று வினவியபோது ரேஷன் கார்டு அப்ளை செய்யும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற செய்தி உடனே என்னுடைய மகனுக்கு ஆதார் கார்டு அப்ளை செய்தேன்.
நீங்களும் ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு கண்டிப்பா வேண்டும்.
0 Comments
Thanks For Your Comment